உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் சாவு

புவனகிரி: புவனகிரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி இறந்தார்.புவனகிரி அருகே சுத்துக்குழியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 70; இவர், நேற்று முன்தினம் காலை டீ குடிக்க புவனகிரி வந்தார். பங்களா அருகில் சாலையை கடக்க முயன்றபோது விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவப்பிரகாசத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார்.புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை