உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் மோதி முதியவர் பலி 

ரயில் மோதி முதியவர் பலி 

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரயிலில் மோதி 60 வயது முதியவர் பலியானது குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி ரயில் நிலையத்திற்கும், திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நேற்று காலை 6:30 மணிக்கு விழுப்புரம்- திருவாரூர் வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.ரயில் தண்டவாளத்தை கடந்த போது 60 வயது மதிக்கதக்க முதியவர் ரயிலில் அடிப்பட்டு அடிப்பட்டு இறந்தார்.இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து இறந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை