உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சிறையில் மோதல் கைதிகளில் ஒருவர் காயம்

கடலுார் சிறையில் மோதல் கைதிகளில் ஒருவர் காயம்

கடலுார்;கடலுார் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில், 800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு, சென்னை, திருவல்லிக்கேணி அழகுமுத்து, 40, நெய்வேலி வடகுத்து கோபி, 38, ஆகியோர் கொலை வழக்கில் ஒராண்டாக விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.நேற்று மாலை சிறை அறைக்குள் சென்றபோது, இருவரும் ஒருவரை, ஒருவர் தெரியாமல் மோதிக்கொண்டனர். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்த சக கைதிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.நேற்று காலை அறையில் இருந்து வெளியே வந்தபோது, மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் சிறையில் பதற்றம் ஏற்பட்டது. சிறை காவலர்கள் இருவரையும் விரட்டினர். தாக்குதலில் காயமடைந்த கோபியை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்