உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரத்துார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

ஒரத்துார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கருப்புசாமி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 5 ஆம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தளாளர் டாக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கி விழாவினை துவக்கி வைத்தார். வர்த்தக சங்க முன்னாள் மாநிலத் தலைவர் பக்கிரிசாமி, டாரஸ் லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் சோலைமலை, ஏவி கேஸ் அறக்கட்டளை நிர்வாகி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை, பரதநாட்டியம், பேச்சுப்போட்டி, திருக்குறள் விளக்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஏவி கேஸ் அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளி ஆசிரியை கோப்பெருந்தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை