| ADDED : ஆக 23, 2024 12:34 AM
பெண்ணாடம்: கிளிமங்கலத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை நடந்தது.பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் ஊராட்சி, காலனியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால், நேரடியாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி, புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.18.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.அதனையொட்டி குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ரேவதி பூவராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பழனி வரவேற்றார்.அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பூமி பூஜையை துவக்கி வைத்தார். நல்லுார் ஒன்றிய பொறியாளர் சுகந்தி, நிர்வாகிகள் செந்தில், ராமலிங்கம், சிவா, செந்தில்குமார், ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் தங்கதுரை நன்றி கூறினார்.