உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ்: துரைராஜ் பெருமிதம்

கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ்: துரைராஜ் பெருமிதம்

கடலுார்: கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சுமங்கலி சில்க்ஸ் நிறுவனம் உள்ளது என, சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் கூறினார்.கடலுார் பாரதி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பேலஸ் சுமங்கலி சில்க்சை, சங்க நிர்வாகிகளுடன் பார்வையிட்ட கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் கூறியதாவது:கடலுார் பாரதி சாலையில் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூன்றாவது தலைமுறையாக உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நிறுவனமாக அமைந்துள்ளது.கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் பேராதரவை பெற்று, தனி நிறுவனமாக வளர்ந்துள்ளது. கடலுாரின் தினசரி வர்த்தகம் 40 கோடி ரூபாயாக உள்ளது. 80 கோடி ரூபாயாக இலக்கை எட்ட இந்நிறுவனம் பெரும் பங்காக உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏராளமான கலெக் ஷன்கள் இந்த புதிய கடையில் குவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நியாயமான விலையில் ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகிறது. பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜை, பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர்கள் நிஸ்டர், ஹர்ஷத் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ