உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 

கடலுார்: கடலுார், தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் ஆடிப்பெருக்கையொட்டிமாணவ, மாணவிகள் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, பனை விதைகள் நட்டு துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவ, மாணவிகள் கல்லுாரதி வளாகம் முழுதும் 500க்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர்.தாவரவியல் துறைத் தலைவர் நிர்மல்குமார், பனை விதைகள் நடும் நோக்கம் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் தாவரவியல் துறை அனைத்து பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் பொருளியியல் ராமகிருஷ்ணன் சாந்தி, நுண்ணுயிரியல் ஆனந்தராஜ், உளவியல் அருள்தாஸ், அரசியல் துறை இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ