உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பு அகற்ற ஊராட்சி கெடு

ஆக்கிரமிப்பு அகற்ற ஊராட்சி கெடு

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுார் ஊராட்சியில், அந்தோணியார் கோவில் தெரு, காலனிதெற்கு தெரு பகுதியில ரூ. 20 லட்சம் மதிப்பில், வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், வடிகால் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ளுமாறு கோவிலானுார் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.அதில், ஏழு நாட்களுக்குள்தாங்களாக ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள தவறினால், ஊராட்சி மூலம் அகற்றப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை