உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிவராகநல்லுாரில் ஏரி வெட்டும் பணி பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

ஆதிவராகநல்லுாரில் ஏரி வெட்டும் பணி பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

புவனகிரி: புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் ஊராட்சியில் ஆக்கிரப்பில் இருந்த 17 ஏக்கர் பரப்பிலான ஏரியை, ஊராட்சி பொதுமக்கள் முயற்சியால் வெட்டும் பணி துவங்கியது. நேரில் பார்வையிட்ட எம்.எல்.ஏ., பாண்டியன் தொகுதி நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்குவதாக உறுதியளித்தார்.புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் ஊராட்சியில் 17 ஏக்கர் பரப்பிலான ஏரியில் மழை காலங்களில் மற்றும் காவிரியில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்தனர். இதனால் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். காலப்போக்கில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி ஏரி இருந்த அடையாளமே தெரியாமல் போனது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதிநாகலிங்கம் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்கள் உதவியுடன் ஏரி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.தகவலறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் நேரில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினை பாராட்டி சொந்த நிதி ரூ.25 ஆயிரம் வழங்கினார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தார். அப்போது ஊராட்சி தலைவர் ஜோதிநாகலிங்கம், கிராம நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலு, பன்னீர்செல்வம், சதீஷ் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ