உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஞ்., தலைவர் குடும்பத்தினர் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம்

பஞ்., தலைவர் குடும்பத்தினர் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே ஊராட்சி தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்தன. அதில் ஊராட்சி தலைவர் மணிமேகலை. அவரது கணவர் விஷ்ணு. மாமனார் கலியன் (தி.மு.க., கிளை செயலர்), மாமியார் ராணி ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டிருந்தன.கடந்த சட்டசபை தேர்தலிலும் பெயர் இருந்தது. அனைவரும் ஓட்டளித்தனர். ஆனால் 2024 லோக்சபா தேர்தல் புதிய வாக்காளர் வரைவு பட்டியலில் இவர்களது 4 பெயர்கள் விடுபட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கையும் இல்லை.இதுகுறித்து, ஊராட்சி தலைவி மணிமேகலை கூறுகையில், 'இந்த கிராமத்தில் இறந்து போனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஆனால் உயிரோடு இருக்கும் எங்கள் குடும்பத்தினர் பெயர் எப்படி நீக்கப்பட்டது என தெரியவில்லை. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேர்தல் துறையும் எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறது' என்றார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ஆர்.டி.ஓ.,) சையத் மெஹ்மூத் கூறுகையில், 'கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த தகவல் தொடர்பாக புகார் வந்தது. பெயர் நீக்கத்திற்கு காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது' என்றார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை