உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் வடிவேல் பத்தர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்; இவரது வீட்டின் மாடி படியில் நேற்று காலை மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைக்கண்டவிஜயகுமார் உடனடியாக கடலுார் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி, வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.இது குறித்து கடலுார் வனச்சரக அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். இதனால்,அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ