உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வூதியர் சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டதலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கருணாகரன்,சிவபிரகாசம், கலியமூர்த்தி, பத்மநாபன் முன்னிலை வகித்தனர். மாவட்டசெயலாளர் பழனி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், நிர்வாகி சிவராமன் வாழ்த்துரை வழங்கினர்.நீதிமன்ற தீர்ப்புகளின்படி காப்பீடு திட்டத்தில்முழு செலவின தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள மருத்துவ செலவின தொகையை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் ஆதவன், சுந்தரமூர்த்தி, பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநில செயலாளர் மனோகரன் நிறைவுரையாற்றினார்.பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ