உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவித்த மக்கள்

துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவித்த மக்கள்

கடலுார் : கடலுார் துறைமுகத்தில் நேற்று மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.கடலுார் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம்,அக்கரைக்கோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு கிராமமீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்றுமீன்பிடித்து வருகின்றனர்.இவ்வாறு பிடித்து வரும் மீன்களை கடலுார்முதுநகர், துறைமுகத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலுார் துறைமுகத்தில் மீன்கள்வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ வஞ்சிரம் 900 ரூபாய், சங்கரா 400, வவ்வால் 500, பெரியவகை இறால் 500, சிறிய வகை இறால் 300,கனவாய் 250, நெத்திலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு வகையான மீன்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை