உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் அலுவலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த மக்கள்

கலெக்டர் அலுவலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த மக்கள்

கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்ததனர்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தது.முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து நீண்ட வரிசையிலும், தரையில் அமர்ந்து காத்திருந்து மனு கொடுத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி