உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

கடலுார் : தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, அம்பிகா ஆலை பகுதிதலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வரதன், பொருளாளர்கொளஞ்சிநாதன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர்ரவீந்திரன், மாநில தலைவர் வேல்மாறன், மாநில செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர்.இதில், அம்பிகா சர்க்கரை ஆலை கரும்பு பணபாக்கிமுழுவதையும் வட்டியுடன் பெற்றுத்தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்,இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அப்போது, நிர்வாகிகள் ஜோதிராம், ரவிச்சந்திரன், மகாலிங்கம், லோகநாதன்,தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ