உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு அருங்காட்சியகத்தில் பீடம் அமைத்து சிலை அமைப்பு

அரசு அருங்காட்சியகத்தில் பீடம் அமைத்து சிலை அமைப்பு

கடலுார்:கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் பீடம் அமைத்து சிலைகள் நிறுவும் பணி நடக்கிறது.கடலுார் மஞ்சக்குப்பம் பழயை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட வரலாறு, கலாசாராம், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பழமையான கல் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆய்வாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.அருங்காட்சியகத்தை புதுப்பிக்க துறை வாயிலாக, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி நடந்து வருகிறது. அருங்காட்சியக சுவர்கள் சீரமைப்பு பணிகள் முடிந்து, பெயிண்டிங் செய்யப்பட்டு, மின் விசிறிகள், வண்ண விளக்குகள், தரை விரிப்புகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் பகுதியில் சிலைகளை முறையாக வைக்கும் வகையில், மேடை அமைக்கும் பணி துவங்கியது.அதற்காக கற்சிலைகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேறு இடத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, இங்கு கான்கிரீட் மூலம் பீடம் அமைக்கப்பட்டது. அதில், கிரேன் மூலம் சிலைகள் நிறுவும் பணி நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை