உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு வழக்கறிஞர் தாக்கு இருவருக்கு போலீஸ் வலை

அரசு வழக்கறிஞர் தாக்கு இருவருக்கு போலீஸ் வலை

வடலுா : வடலுாரில் முன்விரோதம் காரணமாக, அரசு வழக்கறிஞரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.வடலுார் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 56; குறிஞ்சிப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராகவும், பார் அசோசியேஷன் தலைவராகவும் உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை ஆபத்தாரணபுரம் பகுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த வடக்குத்து முன்னாள் ஊராட்சி தலைவர் அன்புமணி, ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிச்சந்திரன் ஆகியோர், முன்விரோதம் காரணமாக கோபாலகிருஷ்ணனை தாக்கி ,கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரில், அன்புமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது, வடலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று குறிஞ்சிப்பாடி நீதிமன்ற வழக்கறிஞர்கள், கோபாலகிருஷ்ணனை தாக்கியவர்களை கைது செய்யவில்லை என கூறி, வடலுார் இன்ஸ்பெக்டரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை