உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் மழை: நெல் மூட்டைகள் சேதம்

விருத்தாசலத்தில் மழை: நெல் மூட்டைகள் சேதம்

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.விருத்தாசலம் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரபகுதிகளில் விவசாயிகள், அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.இந்நிலையில்,விருத்தாசலம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவுகனமழை பெய்தது. அப்போது,நெல் மணிகள் அனைத்து மழையில் நனைந்து சேதமாயின. அதேபோல், விருத்தாசலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.தற்போது,தினசரி இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால்,நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை