| ADDED : ஜூன் 19, 2024 01:53 AM
திட்டக்குடி:திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் புதைக்கப்பட்டிருந்த ஆண் நபரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.திட்டக்குடி அடுத்த கோழியூர் வெள்ளாற்றில் நேற்று முன் தினம் காலை, ஆண் உடல் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார், அந்த உடலை மீட்டனர்.இறந்து கிடந்த ஆண் சட்டைப் பையில் ஆதார் கார்டு இருந்தது. அதில், காட்டுமன்னார்கோவில், ரெட்டைத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் பாலாஜி, 46, என இருந்தது. அந்த முகவரிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து வந்தவர்கள் வந்து இறந்து கிடப்பவர் பாலாஜி என்பதை உறுதி செய்தனர்.தொடர் விசாரணையில் பாலாஜி, மனைவியை பிரிந்து 10 ஆண்டாக வாழ்ந்து வந்ததும், அவர் கள்ளக்குறிச்சி, திருச்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில் சில மாதங்கள் பணி புரிந்தவர், பின்னர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாதது தெரிய வந்தது.அதையடுத்து, பாலாஜியின் உடலை, போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.