உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருளம்பட்டு கிராமத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை

இருளம்பட்டு கிராமத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை

பெண்ணாடம்: திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக இருளம்பட்டு கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த இருளம்பட்டு கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை பஸ் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் துாரமுள்ள மாளிகைக்கோட்டம் பஸ் நிறுத்தம் அல்லது 6 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் பஸ் நிலையம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் சிரமம் அடைகின்றனர்.எனவே, திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக இருளம்பட்டு கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை