உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி மார்க்கெட் பணி விரைவாக துவங்க கோரிக்கை

பண்ருட்டி மார்க்கெட் பணி விரைவாக துவங்க கோரிக்கை

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டட பணியை விரைந்து முடிக்க, நகராட்சி சேர்மன் ராஜேந்திரனிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.பண்ருட்டி நகராட்சி சார்பில், காய்கறி மார்க்கெட் பகுதியில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதியதாக ரூ.5 கோடியில் கட்டப்பட உள்ளது. இதையடுத்து, மார்க்கெட் பகுதியல் உள்ள கடை வாடகைதாரர்கள் பணிகள் துவங்க ஏதுவாக வரும் 30ம் தேதிக்குள் கடையை காலி செய்து தரும்படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரனை, மளிகை கடை வியாபாரிகள் உள்ளிட்ட ஒரு குழவினர் சந்தித்து ஒரே நேரத்தில் கடைகள் இடித்து அகற்றி பணிகள் துவங்காமல் பகுதி பகுதியாக துவங்கி நடத்த வேண்டும். மாற்று இடம் வழங்கிட வேண்டும் என மனு வழங்கினர்.காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் சிவா தலைமையில் மாற்று இடம் தேர்வு செய்து, கடைக்கான பாதுகாப்பு, மின் இணைப்பு, சுகாதார வசதியுடன் செய்து தர வேண்டும். பணிகளை விரைவாக முடித்து வாடகைதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை