உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற கோரிக்கை

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற கோரிக்கை

மந்தாரக்குப்பம்: கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மந்தாரக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் திருமணவிழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட பேனர்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஒட்டிகள் சாலைகளில் செல்லும் போது கவனம் மாறி விபத்துக்களில் சிக்குகின்றனர். பொது இடங்களில் பேனர்கள் வைக்க நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் பேனர் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெறமால் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் கோடை காலங்களில் தரைக்காற்று அதிகரிக்கும்போது பேனர் சாய்ந்து வாகன ஒட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற சம்பந்தம்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !