உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவை ஜன சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க கோரிக்கை

கோவை ஜன சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க கோரிக்கை

சிதம்பரம்: கோவை ஜன சதாப்தி ரயிலை, சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திற்கு, ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.சிதம்பரத்தில், ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டம் சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் கம்பன் அம்பிகாபதி, சட்ட ஆலோசகர் ஸ்ரீதர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து மூன்று மாதங்கள் கடந்தும், மைசூர் - கடலுார் ரயிலை சிதம்பரம் வழியாக இயக்க இதுவரை எந்த அறிவிப்புகளும் வரவில்லை.இதனை உடனடியாக அமல்படுத்த கோருவது, கடலூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், சிதம்பரத்தில் நிற்காமல் செல்லும் கம்பன், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை ஜன சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை