உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையோரம் கிடு கிடு பள்ளம்; கிராம சாலையில் விபத்து அபாயம் 

சாலையோரம் கிடு கிடு பள்ளம்; கிராம சாலையில் விபத்து அபாயம் 

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில், சாலையோரம் மண் அணைக்காததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் தேர்தலுக்கு முன்பு சாலை போடப்பட்டது. கிராமத்திற்கு செல்லும் இச்சாலையில் 1 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைத்து, சுமார் 2 மாதம் கடந்துள்ள நிலையில் சாலையோரம் மண் அணைக்காததால், தினம் தினம் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எதிரில் வாகனங்கள் வழிவிட ஒதுங்கினால், பக்கவாட்டு பள்ளத்தில் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில், சாலையோரம் மண் அணைத்து, விபத்துக்களை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை