உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரோட்டரி சங்க மருத்துவ முகாம்

ரோட்டரி சங்க மருத்துவ முகாம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், பக்கவாதம் மற்றும் சதைக்கட்டியின் அளவை கண்டறியும் முகாம் நடந்தது. சிதம்பரம் நகர்புற சுகாதார மையத்தில் நடந்த முகாமிற்கு, சங்கத் தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் முகாமை துவக்கி வைத்தார்.பேராசிரியர் சுவாமிநாதன், முகாம் நோக்கம் குறித்து பேசினார். துணை ஆளுநர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். 50 க்கும் மேற்பட்ட இயன்முறை சிகிச்சை துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தொடர் சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 100 பயனாளிகள் பயன்பெற்றனர். சங்க செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !