| ADDED : ஜூன் 26, 2024 07:42 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் தலா 10 லட்சம் ரூபாயில் நான்கு பாலங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி வழியாக ஜெயங்கொண்டம், அரியலுார், திருச்சி, பெரம்பலுார், தஞ்சாவூர் மார்க்கமாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.அதில், விருத்தாசலம் புறவழிச்சாலையில், சித்தலுார் ரவுண்டானா முதல் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் அதிவேமாக செல்ல வாய்ப்புள்ளது.இதனால் விபத்துகளை தவிர்க்கும் வகையில், ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை உள்ள சாலையில் உள்ள மூன்று ஓடை பாலங்களின் இருபுறம், தலா 10 லட்சம் மதிப்பில் ராட்சத இரும்பு தடுப்புகள் (மெட்டாலிக் கிராஷ் பேரியர்) அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அதுபோல், சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து சேலம் புறவழிச்சாலையில், பெண்ணாடம் செல்லும் பிரிவு சாலையில் உள்ள கல்வெர்ட் மீது 10 லட்சம் ரூபாயில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரிரு வாரங்களில் முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.