புவனகிரி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்.சி., எஸ்.டி., பிரிவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.புவனகிரியில் நடந்த கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அம்வேல், ராஜவேல், ஆரோக்கியஸ்டாலின், மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன், ராமலிங்கம், பரமசிவம், கவுரவத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மாயவன் வரவேற்றார். கூட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி சங்கம் அமைப்பதன் மூலம் உரிய உரிமைகளை பெறுவது குறித்தும் சங்கத்தின் நோக்கம் குறித்து பேசினர். மேலும்,வட்டக்கிளை வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, நலச்சங்கத்திற்கு தனி லோகோ அமைப்பதுடன் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடங்களில், பட்டியலின ஊழியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அறிவழகன், விஜயபிரகாஷ், விஜய், ஜீவானந்தம், தினேஷ்குமார் நிர்வாகிகள் ஞானம், வினோத், முருகன், ஆரோக்கியராஜ், நாகராஜன், சரவணன் மற்றும் ஊராட்சி செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சரவணன் நன்றி கூறினார்.