உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தந்தை இறந்த சோகம்; மகன் தற்கொலை

தந்தை இறந்த சோகம்; மகன் தற்கொலை

பண்ருட்டி : தந்தை இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத் சேமக்கோட்டை காந்தி வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 42;.கூலி வேலை செய்து வந்தார். திருமணமாகி, சுதா என்ற மனைவி உள்ளார். இவரது தந்தை நாகமுத்து கடந்த 11ம் தேதி இறந்து விட்டார். இந்த சோகத்தில் இருந்த திருநாவுக்கரசு, நேற்று முன்தினம் தந்தையின் காரியம் நடந்த நிலையில், அன்று இரவு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். திடுக்கிட்ட உறவினர்கள், அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை