உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி கூட்டம்

மின் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி கூட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில்மின்வாரிய தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கான பயிற்சி கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் ஜெயந்தி தலைமை தாங்கி மின் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிகள் செய்வது குறித்து பேசினார்.தமிழ்மணி வரவேற்றார்.சேத்தியாத்தோப்பு உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிவேல்,வருவாய் பிரிவு அலுவலர் பாலாஜி, உதவி பொறியாளர்கள் அம்பேத்கர், கணேஷ், பாரி ஆகியோர் மின்தொழிலாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் கையாள வேண்டும் என எடுத்துரைத்தனர்.துணை மின்நிலையத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ரவிச்சந்திரன், ஜெயகாந்தன், சிவக்குமார், குமார் ஆகிய மின் முகவர்களை பாராட்டி கேடயம் சான்று வழங்கினர்.இதில் உதவி பொறியாளர்கள், பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி மின் தொழிலாளர்கள்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ