உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்றில் தொடரும் மணல் திருட்டு

வெள்ளாற்றில் தொடரும் மணல் திருட்டு

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் இரவு நேரங்களில் தொடரும் மணல் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் துவங்கும் வெள்ளாற்றின் வடக்குப்பகுதி கட்டுக்கரை, பெரியகுப்பம், சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், பெரியநற்குணம், பு.ஆதனுார், அகரஆலம்பாடி, பெருவரப்பூர், கோட்டுமுளை, சிறுவரப்பூர், கம்மாபுரம் வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதே போல வெள்ளாற்றின் தென் பகுதியில் அள்ளூர், குமாரக்குடி, மழவராயநல்லுார், முடிகண்டநல்லுார், சாந்திநகர், காவலக்குடி, கூடலையாத்துார், அம்புஜவல்லி பேட்டை என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. வெள்ளாற்றினை மூலதனமாக வைத்து இரவு நேரங்களில் டிராக்டர்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என மணல் திருட்டு பகிரங்கமாக நடந்து வருகிறது.மணல் திருட்டு நடப்பதற்கு உள்ளூர் போலீஸ்காரர்களே உடந்தையாக செயல்படுவதால் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலிலும் மணல் கொள்ளை தொடர்கிறது.எனவே, வெள்ளாற்றில் தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்க எஸ்.பி., நேரடியாக ஆய்வு செய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை