உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சந்தன மரம் வெட்டி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

சந்தன மரம் வெட்டி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தனியார் நிலத்தில் பயிரிடப்பட்ட சந்தன மரங்கள் வெட்டிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுாரைச் சேர்ந்தவர் பழனிவேல், 45. விவசாயி. இவர் அதேப் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சந்தன மரம் பயிரிட்டு கண்காணித்து வந்துள்ளார். கடந்த 19ம் தேதி காலை வயலுக்கு சென்று பார்த்தபோது 7 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி, திருடிச் சென்றது தெரிந்தது.இது குறித்து பழனிவேல் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை