உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்றுகள் வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

மரக்கன்றுகள் வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார், : கடலுார் சட்டசபை தொகுதியில் மரக்கன்றுகள் வழங்கும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.ஈஷா யோகா சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்தை காக்க கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க உள்ளனர். இதையொட்டி, கடலுார் சட்டசபை தொகுதியில் மரக்கன்றுகள் வழங்கும் பணியை, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.கோவை ஈஷா யோகா மையம், காவேரி கூக்குரல் இயக்கம் சாமி தபோமூலா, வள்ளி விலாஸ் பாலு, வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.அப்போது, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள், ஈஷா யோகா தன்னார்வ தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை