| ADDED : மே 10, 2024 09:45 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து, சாதனை படைத்தது.விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக்குழுமத்தின், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 71 மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி நித்யஸ்ரீ 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தார். பள்ளியளவில் மாணவர் சூரியா 490, மாணவி ஷாலினி, மாணவர் கிருஷ்ணன் முறையே 481 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.450க்கு மேல் 15 பேர், 400க்கு மேல் 31 பேர் மதிப்பெண்கள் பெற்றனர். 100க்கு 100 மதிப்பெண்களை 5 மாணவர்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்விக்குழும தலைவர் டாக்டர் சுரேஷ் சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி வாழ்த்தினார். மாணவர்களின் வெற்றிக்கு துணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண், முதல்வர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.