உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி வித்யாலயா பள்ளி சென்டம்

சரஸ்வதி வித்யாலயா பள்ளி சென்டம்

கடலுார்: கடலுார் சரஸ்வதி வித்யாலயா பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலமாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவிகள் விஷ்ணு பிரியா 493 மதிப்பெண், சந்தியா 488, மாணவர் தானேஷ் 485 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.கணிதத்தில் 6 பேர், அறிவியலில் ஒருவர், சமூக அறிவியலில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அனைத்து மாணவர்களும் 300 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். அவர்களை பள்ளி சேர்மன் சிவக்குமார் பாராட்டினார். முதல்வர் உதயகுமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை