உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்கூல் பேக் விற்பனை ஜோர்

ஸ்கூல் பேக் விற்பனை ஜோர்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பதை முன்னிட்டு, ஸ்கூல் பேக் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (10ம் தேதி) திறக்கப்படுகிறது. பள்ளிகளில் இன்றைய தினமே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை திறக்க விரிவான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க ஏற்கனவே கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.வெளியூர் சென்ற மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர். பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், பேனா, பென்சில், ரப்பர், நோட்டு, வாட்டர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ்கள் உள்ளிட்டவைகள் வாங்க குவிந்தனர். இதனால், எழுது பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ