உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேக்கிழார் குருபூஜை

சேக்கிழார் குருபூஜை

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் சேக்கிழார் குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மண்டபத்தில், திருமுதுகுன்றம் தெய்வச் சேக்கிழார் செந்தமிழ்ச் சங்கம் சார்பில், குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. காலை 8:00 மணியளவில், பழமலைநாதர், அம்பாள் மற்றும் சேக்கிழார் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.கயிலை வாத்தியங்கள் முழங்க சேக்கிழார் செந்தமிழ்ச் சங்க நிர்வாகிகள், சிவனடியார்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோடும் வீதிகள் வழியாக சுவாமிகள் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை