| ADDED : மே 01, 2024 07:22 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதி விவசாய நிலங்களில் உள்ள போர்வெல் மின்மோட்டார்களை திருடும் மர்ம நபர்களால் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு துவங்கி பின்னலுார், ஆணைவாரி, மிராளூர், சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், எறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் போர்வெல் மின்மோட்டார் வைத்து சம்பா, குறுவை உள்ளிட்ட பருவங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி முடிந்து அறுவடைக்கு பின்பு மின்மோட்டார்கள் பாசனம் இல்லாததால் விவசாயிகள் இயக்குவதில்லை. அந்த நேரங்களில்வயல்வெளிகளில் விவசாயிகள் நடமாட்டம் இருப்பதில்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மின்மோட்டார்களை திருடிச்சென்று அதில் உள்ள காப்பர் காயில் ஒயர்களை எடுத்து விற்பனை செய்கின்றனர்.மின்மோட்டார்கள் திருடு குறித்து புகார் கொடுத்தாலும் போலீசார் அதனை பெரிதாக கருதுவதில்லை. போலீசார் இரவு நேரம் ரோந்து செல்வதை மறந்துவிட்டனர். இதனால் வீடுகளில் கொள்ளை, நகை திருட்டு, மின்மோட்டார் திருட்டு, உதாரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பாட்டியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 45 சவரன் நகை கொள்ளையடித்து சென்றதை இதுநாள் வரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யவில்லை. எம்,ஆர்.கே., சர்க்கரை ஆலை எதிரில் உள் மின்நகரைச் சேர்ந்த லலிதாபாலகுரு தனக்கு சொந்தமான நிலம் தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கிணற்றில் பாசனத்திற்கு வைத்திருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள நிலையில், தற்போது 4 முறையாக மின்மோட்டாரை திருடியுள்ளனர்.தொடர் மோட்டார் திருட்டால் சேத்தியாதோப்பு பகுதி விசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே சேத்தியாத்தோப்பில் நடைபெறும் திருடு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசாரை உயர் அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.