உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் கடந்த 30ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அதனையொட்டி அன்று காலை புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்யஹோமம், அஷ்டோத்ர சத 108 கலச திருமஞ்சனம், மகாபூர்ணாஹீதி, கடம் புறப்பாடு, வேதபிரபந்த சாற்றுமுறை நடந்தது. மாலை உற்சவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடு நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நாளை 4ம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையிலும், மூலவர் பெருமாள் பூவங்கி சேவையிலும் அருள்பாலிக்கின்றனர். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை