|  ADDED : ஏப் 28, 2024 04:28 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
விருத்தாசலம், :  விருத்தாசலம் அடுத்த எருமனுார் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தில் உள்ள சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியில் கல்லுாரி, இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லுாரி, பூங்கோதை அம்மாள் நர்சிங் பள்ளி ஆகியவற்றில் விளையாட்டு விழா நடந்தது.கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கல்வி குழும செயலாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார், டீன் கவிபாண்டியன் முன்னிலை வகித்தனர். திருவாரூர் அரசு கல்லுாரி உடற்கல்வி துறை உதவி பேராசிரியர் அழகேசன், விழாவை துவங்கி வைத்தார்.கல்லுாரி முதல்வர் பழனிவேல், இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லுாரி முதல்வர் ரமேஷ், கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ், பூங்கோதை அம்மாள் நர்சிங் பள்ளி முதல்வர் ஞானசுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பாண்டியன் செய்திருந்தார். கபடி, வாலிபால், கோ கோ, குண்டு எறிதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.