உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணம் போலீசில் எஸ்.பி., ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் போலீசில் எஸ்.பி., ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் கடலுார் எஸ்.பி., ராஜாராம் ஆய்வு செய்தார்.ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில், பராமரிக்கப்பட வேண்டிய கோப்புகள் குறித்தும், வழக்குகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆயுத வைப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த போலீஸ் குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகள் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ரூபண்குமார், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர்கள் தேவி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ