உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேமல் புயல் எதிரொலி கடலுாரில் கடல் சீற்றம்

ரேமல் புயல் எதிரொலி கடலுாரில் கடல் சீற்றம்

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் 'ரேமல்' புயலாக உருவெடுத்தது. இது நேற்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. புயல் காரணமாக கடலுார் தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களை கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை. பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ