உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேமிப்பு கணக்கு துவங்க மாணவர்களுக்கு அழைப்பு

சேமிப்பு கணக்கு துவங்க மாணவர்களுக்கு அழைப்பு

விருத்தாசலம்,: விருத்தாசலம் கோட்டத்தில் உள்ள மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க, விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; விருத்தாசலம் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே புதிய சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களுக்கான சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கை துவங்கி கொள்ளலாம்.சேமிப்பு கணக்கு துவங்க குறைந்தபட்ச வைப்புத் தொகை ஏதும் இல்லை. கணக்கு துவங்க பத்து வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தங்களின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை, பான் கார்டு, இரண்டு பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை எடுத்து வரவும்.அதேபோல், பத்து வயதுக்கு மேல் உள்ள மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் ஆகிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை