உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்கள் நிலவில் குடியேற வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

மாணவர்கள் நிலவில் குடியேற வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

விருத்தாசலம், அடுத்த தலைமுறை மாணவர்கள் நிலவில் குடியேற வேண்டும் என, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார். விருத்தாசலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: குழந்தைகளுக்கு கல்வி ஒரு முக்கியமான வாழ்க்கை தரும். வாழ்க்கையில் கல்வி மட்டுமே மேன்மையானது. பெற்றோர் சொல்லை கேட்டு குழந்தைகள் நடக்க வேண்டும். வருங்கால தேசிய நேசத்தை காக்க வேண்டிய பங்கு மாணவர்களுக்கு உள்ளது.இன்று நம் சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி உள்ளோம். வளரும் தலைமுறைகளான நீங்கள், நிலவில் குடியேறும் அளவுக்கு வளர வேண்டும்.நான் கிராமப்புற பள்ளியில் படித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.அறிவாளிகளால் மட்டுமே கிடைத்ததை விரும்ப முடியும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என இருக்க கூடாது. சாதித்து காட்ட வேண்டும். இந்தியாவை கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் தவறுதலாக இந்தியா என நினைத்து அமெரிக்காவை கண்டுபிடித்தான்.ஆனால் இன்று அமெரிக்காவின் வளர்ச்சி எங்கு இருக்கிறது. நமது அடுத்த தலைமுறை நிலவில் வாழ வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை