உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலையில் சுரங்கவியில் படிப்பு கலந்தாய்வு

அண்ணாமலை பல்கலையில் சுரங்கவியில் படிப்பு கலந்தாய்வு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழத்தில் சுரங்கவியில் பட்டயப்படிப்பிற்கு கலந்தாய்வு நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் என்.எல்.சி., நிலக்கரி சுரங்கம் இடையேயான கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பொறியியல் துறை வளாகத்தில் 2016 முதல் என்.எல்.சி., நிதி உதவியுடன் சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடந்து வருகிறது.மூன்று ஆண்டுகள் படிக்கும் சுரங்கவியல் பட்டயப் படிப்புக்கான 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று நடந்தது, 325 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், என்.எல்.சி., க்கு நிலம் கொடுத்தவர்கள், 30 பேர், பொதுப்பிரிவில் 30 பேர், தமிழக அரசின் இன சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.சுரங்கவியல் பிரிவின் இயக்குநர் சரவணன் தலைமையில், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் பாலபாஸ்கர், அறிவழகன், வெள்ளைமுத்து, சாமிநாதன், கோபிநாதன் மாணவர் சேர்க்கை நடத்தினர். பேராசிரியர்கள் பாலமுருகன், பிரேம்குமார், சிவராஜன், ராஜசோமசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை