உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாட்டிலில் பெட்ரோல் வழங்க திடீர் தடை

பாட்டிலில் பெட்ரோல் வழங்க திடீர் தடை

கடலுார்: தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.லோக்சாபா தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்சித் தலைவர்களின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், வேன் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி, தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் பங்க் உரியைாளர்களுக்கு போலீசார் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. தேவையில்லாமல் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலுார் பெட்ரோல் பங்குகளில், போலீசார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh
ஏப் 14, 2024 08:22

கேணத்தனமா இருக்கு இதை வச்சு வெடிய போடுறேன் பாட்டிலிலா வாங்குவான் பைக் டேங்க் ரொப்பி வீட்ல சாவகாசமாக பாட்டிலில் மாத்திக்க போறான் பாட்டிலில் பங்க்ல போய் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்லியா வாங்குவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை