உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடை கால மல்லர் கம்பம் இலவச பயிற்சி முகாம்

கோடை கால மல்லர் கம்பம் இலவச பயிற்சி முகாம்

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணத்தில் கோடை கால மல்லர் கம்பம் இலவச பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சிறகுகள் தமிழர் தற்காப்பு கலை பயிற்சிப் பள்ளி, ரோட்டரி கிளப், மகாலட்சுமி டிரேடர்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மல்லர்கம்பம், சிலம்பம், யோகா, குத்துவரிசை ஆகிய தற்காப்பு கலைகளுக்கான இலவச பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு மகாலட்சுமி டிரேடர்ஸ் உரிமையாளர் வீரவேல் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் பொருளாளர் குருராஜன், உறுப்பினர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.மல்லர் கம்பம் பயிற்சியாளர் சச்சிதானந்தம் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கோடைகாலத்தில் காலை மற்றும் மாலை வேளையில் இலவசமாக பயிற்சி அளிக்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ