உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

நடுவீரப்பட்டு: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 4 நாட்கள், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறும்.அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை நடனபாதேஸ்வரர் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த நிகழ்வு நடந்தது. மாலை 5:50 மணி முதல் 6:10 மணி வரை இந்த நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி