உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்காச்சோளம் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கல்

மக்காச்சோளம் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கல்

சிறுபாக்கம்: மங்களூர் வட்டார வேளாண்துறை சார்பில் 2024 - 25ம் ஆண்டிற்கான தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்கும் வகையில், மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். அதில், மக்காச்சோளம் விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன. சாகுபடியை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள், வரப்பு பயிர் முக்கியத்துவம், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ