உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுவை தொகுப்பு திட்டம்; வேளாண் அதிகாரி ஆய்வு

குறுவை தொகுப்பு திட்டம்; வேளாண் அதிகாரி ஆய்வு

சிதம்பரம், : சிதம்பரம் வட்டாரத்தில் குறுவை தொகுதிப்பு திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குநர் பிரேம்சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.குமராட்சி வட்டாரத்தில், அம்மாப்பேட்டை துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு மற்றும் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தக்கை பூண்டு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை வேளாண் துணை இயக்குநர பிரேம்சாந்தி ஆய்வு செய்தார்.மேலும், சம்பா பட்ட நெல் விதைகள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சிவபுரி மற்றும் வல்லம்படுகை கிராமங்களில் நெல் நடவு இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட வயல்களை ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.குமராட்சி வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்வேல், வேளாண் அலுவலர் சிந்துஜா, துணை அலுவலர் ராயப்பன், உதவி அலுவலர்கள் மாலினி, பாரதிதாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ