உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுவை சாகுபடி திட்டம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு 

குறுவை சாகுபடி திட்டம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு 

கடலுார்: குமராட்சியில் குறுவை சிறப்பு சாகுபடி தொகுப்பு திட்டங்களை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கடலுார் வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குனர்கள் பிரேம்சாந்தி, செல்வம் ஆகியோர் குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் குறுவை சிறப்பு சாகுபடி தொகுப்பு திட்டங்களை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, சாலியந்தோப்பு, கடவாச்சேரி, பெராம்பட்டு, ஜெயங்கொண்டபட்டிணம், வரகூர்பேட்டை, வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களில் இயந்திரம் மூலாக நடவு செய்யப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்தனர். பின், கொள்ளிடம் உபரி நீரால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் நீர் வடிய கடைபிடிக்க வேண்டி வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்வேல், வேளாண்மை அலுவலர் சிந்துஜா, துணை வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி, அலுவலர்கள் மாலினி, பாரதிதாசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ